அரியவகை படங்கள், வரலாற்று பதிவுகள் அடங்கிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

5 0

மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த அரியவகை படங்கள் மற்றும் வரலாற்று பதிவுகளுடன் கூடிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.

சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியக துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியக காட்சி ரதம் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ரதம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்துள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த அந்த ரதத்தை கலெக்டர் லதா வரவேற்று, அதனை பார்வையிட்டார். பின்னர் அரசுத்துறை அதிகாரிகளும் ரதத்தை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:-

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அருங்காட்சியக ரதத்தின் மூலம் கண்காட்சி நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ரதம் வருகை தந்துள்ளது. இந்த ரதம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று எல்லோரும் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியக ரதம் செல்லும்.

இந்த ரதத்தில் தென்னிந்திய நாணயம், சோழர் கால நாணயம், பாரம்பரிய இசைக்கருவிகள், போர் கருவிகள், அரியவகை அஞ்சல் வில்லைகள், சிற்பங்கள், செப்பேடுகள், அரியவகை பாலூட்டி வகைகள், மண்பாண்டங்கள், கனிமங்கள், தாவரவியல், அரியவகை ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனத்தின் உள்பகுதியில் மின்னணு திரையில் பாரம்பரிய வரலாற்று சிறப்பு குறித்த குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவகங்கை வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருங்காட்சியக ரதத்தை பார்வையிட்டனர்.

Related Post

சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Posted by - January 9, 2017 0
சமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - January 12, 2019 0
தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில்…

திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு

Posted by - March 11, 2017 0
திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் மூலம் 16 லட்சம் பேர் விண்ணப்பம் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந்தேதி

Posted by - October 16, 2018 0
தமிழகத்தில் நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்காக 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு…

தமிழகத்தில் 6 இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று கரைப்பு!

Posted by - August 26, 2018 0
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் இன்று கரைக்கப்படுகிறது. 

Leave a comment

Your email address will not be published.