சிட்சிபாசை வீழ்த்தி ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்!

6 0

ரோஜர்ஸ் கோப்பை டென்னிசின் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 – 2 என எளிதில் கைப்பற்றினார்.
இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்தவர் சிட்சிபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Posted by - April 23, 2018 0
தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின்போது ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

குடிபோதையில் விமானம் ஏறவந்த துணை முதல்-மந்திரியின் மகனை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Posted by - May 9, 2017 0
ஆமதாபாத் விமான நிலையத்தில் குடிபோதையில் விமானம் ஏறவந்த குஜராத் துணை முதல்-மந்திரி மகனான ஜெய்மின் படேலை அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள்.

ரேடாரின் கண்ணில் மண்ணை தூவி பறக்கும் போர் விமானம்

Posted by - November 1, 2016 0
அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ‘செங்டு J-20’ ரக போர் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியது.

நியூசிலாந்தில் ஊருக்குள் திரும்பிய ஆற்றுநீர்

Posted by - November 14, 2016 0
நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஊருக்குள் ஆற்றுநீர் பாய தொடங்கியதால் அப்பகுதியில் வாழும் மக்களை அவசரமாக வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜின்பிங்குடன் சேர்ந்து உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரம்ப் உறுதி!

Posted by - November 10, 2017 0
அமெரிக்கா, சீனா இடையே ரூ.16¼ லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜின்பிங்குடன் சேர்ந்து உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அமெரிக்க…

Leave a comment

Your email address will not be published.