பதவி ஏற்புவிழா குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்!

12 0

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய இடம் ஒதுக்கப்படாததால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமணி நேற்று(12)  பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்படாததற்கு நீதிபதி ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், `ராஜ் பவனில் உள்ள விழா ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கை ஒரு கசப்பான அனுபவம். இது ஒரு ஏமாற்றம் மட்டுமல்ல, அரசியல் கட்சியினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடம் ஒதுக்கிய ராஜ்பவன் அதிகாரிகள் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்காமல் அவமதித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற பதிவாளர் ராஜ்பவனில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கவேண்டும் என்று முன்கூட்டியே கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பின்னால் உள்ள வரிசைகள் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது எதிர்பாராதது; வெளிப்படையாக நடந்துள்ளது” என்று நீதிபதி ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தற்போது இந்த சம்பவம் மட்டுமல்ல இதற்கு முன்பும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோயில் திருக்கல்யாண நிகழ்வில் உரியஇடங்கள் ஒதுக்கப்படாத்தால் நீதிபதிகள் வெளியேறியதையும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்..

Related Post

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக 3-வது முறையாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வந்த போலீசார்!

Posted by - December 25, 2018 0
சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் 3-வது முறையாக புகார் அளிக்க வந்த சம்பவம் போலீசார்…

யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

Posted by - May 31, 2018 0
அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’…

ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல: குடியாத்தத்தில் ஜெ.தீபா பேச்சு

Posted by - October 26, 2017 0
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான நீதி விசாரணையாக இருக்கும் என ஜெ.தீபா பேசினார்.

ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு புதிய வரி இல்லை: நிர்மலா சீதாராமன்

Posted by - July 3, 2017 0
ஓட்டல் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. புதிய வரி இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னையில் 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

Posted by - June 28, 2016 0
சென்னையில் நேற்று 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். அவர்களில் 8 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்தார். வடசென்னையில் ரவுடிகள் அட்டூழியம்…

Leave a comment

Your email address will not be published.