பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே புதிய பாலம்

6 0

பாகிஸ்தான் எல்லை அருகே சட்லஜ் நதியின் குறுக்கே பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். 

பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உசைனிவாலா கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கு அந்த கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் நதியின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, எதிரி நாட்டுப்படைகள் முன்னேறாமல் இருப்பதற்காக இந்த பாலம் தகர்க்கப்பட்டது. பின்னர் போர் முடிவடைந்ததும் அங்கு 280 அடி தூரத்துக்கு தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தற்காலிக பாலத்தை மாற்றிவிட்டு 82.40 மீட்டர் தொலைவுக்கு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகளை எல்லையோர சாலை அமைப்பிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இந்த பாலப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புதிய பாலத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருடன் தொடர்புடைய பூமியாகும், உசைனிவாலா. இந்த புனித பூமியில் பணியாற்றும் அரிய வாய்ப்பு பெற்றிருப்பதை, இங்கு பணியமர்த்தப்பட்டு உள்ள ராணுவ வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Related Post

அணுஆயுத சோதனையால் 11.5 அடி தூரம் நகர்ந்த மலை – வடகொரியா அதிர்ச்சி தகவல்

Posted by - May 16, 2018 0
வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

Posted by - March 20, 2017 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்விக் குழுவின்…

ரஷ்ய வான்தாக்குதல் – சிரியாவில் 46 பேர் பலி

Posted by - December 5, 2016 0
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் 46 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 7 சிறுவர்களும், 6 பெண்களும் உள்ளடங்குவதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட…

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஜப்பான் வீரர் சாதனை வெற்றி

Posted by - August 12, 2016 0
ஆண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கோஹி உச்சிமுரா 92.365 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

Leave a comment

Your email address will not be published.