நிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்!

11 0

கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. 

கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.

வெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

மோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

Related Post

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.,வுக்கு நவாஸ் கடிதம்

Posted by - September 2, 2016 0
ஜம்மு – காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து, உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.,வுக்கு பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப்…

அமெரிக்கா கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரியா அரசு குற்றச்சாட்டு

Posted by - February 9, 2018 0
சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினர் நடத்திய தாக்குதல் போர் குற்றம் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 60க்கும் மேற்பட்டவர்கள் பலி!

Posted by - October 17, 2018 0
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய விமானம் – சீனாவில் விரைவில் அறிமுகம்

Posted by - February 16, 2017 0
நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்தாண்டு இறுதியில் விமானத்தை சோதனை ஓட்டத்திற்கு அறிமுகப்படுத்தலாம் என செய்திகள்…

டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் கைது

Posted by - June 29, 2018 0
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் நடத்திய 575 பேர் கைது…

Leave a comment

Your email address will not be published.