குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலி!

22 0

குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார். 

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் உறவினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி-ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் அதில் மூழ்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் பலத்த காயம் அடைந்திருந்தனர்.

சிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.