பாகிஸ்தான் சிறையில் இருந்து 26 இந்திய மீனவர்கள் விடுதலை!

234 0

இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்று பிடிபட்டு சிறையில் இருந்த 26 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது. 

இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலரை பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 26 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இந்தியா திரும்புவதற்கான பயண செலவை எதி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரி கூறுகையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நல்லெண்ண அடிப்படையில் 26 மீனவர்களை விடுதலை செய்துள்ளனர். மேலும், அங்குள்ள சிறைகளில் இருக்கும் மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment