விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழுவினர் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

225 0

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்தொழில் நீரியல்வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா தலைமையிலான குழுவினர் இன்று இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக்கலந்துரையாடியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி என்பவற்றால் தமது வாழவாதாரத்தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருபபதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்த மீனவர்கள் தமது கோரிக்கைகளை உரிய அதிகாரிகள் ஏற்காததையடுத்து மாவட்ட கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் முன்னால் தொடர்ந்து இன்று வரை கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவுக்கு இன்று பகல் 10 மணிக்கு விஜயம் செய்த கடற்தொழில்; நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கினிகே ஜனகபிரசன்ன குமார

மற்றும் அமைச்சர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிரமலநாதன், சாந்திசிறிஸ்கந்தராஜா, எம் ஏ. சுமந்திரன் டக்ளஸ் தேவானந்தா மாவை சேனாதி ராஜா சிவமோகன் அமைச்சர் காதர் மஸ்த்தான் மற்றம் மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், கமலேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment