இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமனம்-சிறிசேன

215 0

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவான கொள்கையை பேணுவதாகும். ஏதேனும் காரணத்தினால் அந்த இருதரப்பு நட்புறவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமானால் அதனை உடனடியாக சரி செய்வது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 நாடுகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நோர்வே நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் அரூஷா குரே

ரஷ்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக

பிரேசிலுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எம.என. ஜபீர்

கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக எம்.ஏ.கே.கிரிஹாகம

போலாந்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக சீ.ஏ.எச்.எம்.விஜயரத்ன

சுவீடனுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எஸ்.எஸ்.கனேகம் ஆரhச்சி

வியட்னாமுக்கான இலங்கையின் புதிய தூதுவராக எஸ்.எஸ்.பிரேமவர்தன

தென் ஆபிரிக்காவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அனுருத்தகுமார மல்லிமாரச்சி

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்ணான்டோ

பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நூர்டீன் முஹம்மட் சகீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூதுவர்களின் முக்கியமானதும் முதலாவதுமான பொறுப்பு இலங்கையின் நற்பெயரை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதும் தாம் இருக்கின்ற நாடுகளின் அதிக பட்ச ஒத்துழைப்பை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் ஆகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் ஊடாக சிலர் போலியான தகவல்களை பரப்புவதற்கு முயற்சித்து வருகின்ற நிலையில்இ இலங்கை பற்றிய சரியான நேர்மறையான பிரதிமையை காட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment