வெல்லவாய – மொனராகல பிரதான வீதியின் மஹகொடயாய பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
நேற்று (11) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரே நிறுவனத்தை சேர்ந்த தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து செல்லும் பேருந்துகள் மூன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
பேருந்து ஓட்டுனர்களின் கவனயீனமே இந்த விபத்து இடம்பெற காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து ஓட்டுனர்களை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

