நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது – 10 இன்ச் உயர்ந்த லாம்போக் தீவு

316 0

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ள நிலையில், தீவின் பூகோள அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.
இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. இதனால் அஞ்சிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளை அகற்றும் போது தொடர்ந்து உடல்கள் மீட்கப்படுவதாக நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
லாம்போ தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் போட்டோக்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a comment