சமஸ்டியை ஏற்கப்போவதில்லை: கூட்டு எதிர்க்கட்சி

283 0

dinesh-udya-vimal-vasu_ciதேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறை அதிகார பரவலாக்கம் என்ற முறையை தாம் முழுமையாக எதிர்ப்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இனப்பிரச்சினை தீர்வுக்காக சமஸ்டியும் மதச்சார்பற்ற அரசியலமைப்பும் அவசியம் என்று நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நேற்று சந்தித்த தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்டி என்பது ஒரு நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும். எனவே கூட்டு எதிர்க்கட்சியை பொறுத்தவரை ஒற்றையாட்சிக்குள்ளேயே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.