எதிர்வரும் 21 இல் ஐநாவில் மைத்திரி உரையாற்றவுள்ளார்

326 0

173948797janaaஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா புறப்படவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, மகிந்த சமரசிங்க, பைசர் முஸ்தபா உள்ளிட்டோரும் நியூயோர்க் செல்கின்றனர்.

அத்துடன், வெனிசுலாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அணிசேரா நாடுகளின் 17 ஆவது உச்சிமாநாட்டில் சிறீலங்கா அதிபர் கலந்துகொள்ளவில்லை.

அவருக்குப்பதிலாக அவரது பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இம்முறை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருந்தார்.

இவர்களின் புறக்கணிப்புக்கு அமெரிக்காவின் நெருக்கமே காரணம் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.