தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது முறையாகவும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நியமனம் பெற்றுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை தொலைநகல் மூலம் ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உப வேந்தருக்கான வாக்கெடுப்பில் அதிகப்படியான 13 வாக்குகளை இவர் பெற்றிருந்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

