இலங்கையிலுள்ள இந்திய எண்ணை நிறுவனமும் (ஐ.ஓ.சி.) எரிபொருள் விலையை இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்தது.
இதன்படி, 95 ஒக்டைன் ரக பெற்றோல் 2.00 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வதிகரிப்புடன், 158.00 ரூபாவாகவிருந்த 95 ஒக்டைன் ரக பெற்றோல் 160.00 ரூபாவாகவும், 129.00 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 130.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக ஐ.ஓ.சி. நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

