பாடசாலை மாணவர்களுக்கு சிகரட் விற்றவர் கைது

332 0

சியம்பலாண்டுவ, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடயான பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு தனது கடையில் இருந்து இவ்வாறு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவருக்கு புகைத்தல் பொளை விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment