ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்கர்கள் சொன்னால் ஜனாதிபதி கேட்கும்- சம்பிக்க

284 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டின் சட்டம் பிக்குகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

ஞானசார தேரருக்கு அந்த தீர்ப்பு சட்டப்படியே வழங்கப்பட்டுள்ளது. தேரருக்கு எதிராக செயற்பட்ட சட்டம் ஏனையவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment