ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலக!

9 0

சிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி ஒன்பது நாடுகளிற்கான தூதுவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்.இதில் தயான்ஜயதிலகவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ரஸ்யாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சிவில் சமூகத்தினர் தயானின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஜனாதிபதி அவர்களின் கரிசனையை புறக்கணித்து இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த சிறிலங்காவின் சிவில் சமூக பிரதிநிதிகள் தயான் ஜயதிலக நியமிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என தெரிவித்திருந்தனர்.

தயான் ஜயதிலகவின் கொள்கையும் 2015 ஜனவரி 8 இயக்கத்தை வழிநடத்திய கொள்கையும் முற்றுமுழுதாக வெவ்வேறானவை எனவும் சிவில் சமூகத்தினர் தமது கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.

Related Post

பத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து

Posted by - January 11, 2018 0
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017 0
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!

Posted by - December 22, 2018 0
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச…

ரஷ்யாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை விருப்பம்

Posted by - August 24, 2017 0
ரஷ்யாவின் ஆயுதங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வமாக இருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற ‘ஆமி 2017’ அமர்வில்…

அர்ஜூன் சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு

Posted by - September 11, 2017 0
அர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

Leave a comment

Your email address will not be published.