மாலைதீவு பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது!

27 0

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாலைதீவைச் சேர்ந்த 49 வயதான நபர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த குறித்த நபரின் நடடிவக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது அவரின் காற்சட்டை பையிலிருந்தும் பணப் பையிலிருந்தும் குறித்த போலி அமெரிக்க டொலர்களை அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

குறித்த நாணயத்தாள்களில் ஒரே இலக்கம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் சுமார் 13, 68,900 இலட்சம் ரூபா பெறுமதியான 8,450 அமெரிக்க டொலர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published.