வாத்துவ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்

10 0

வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக  செய்தியாளர் கூறினார்.

களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தும் சபை: சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை

Posted by - April 17, 2017 0
தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை சீர்திருத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின்…

தற்போதைய நம்பிக்கையில்லா பிரேரணைகள் நகைப்புக்குரியது – ரவி கருணாநாயக்க

Posted by - September 1, 2017 0
தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை நகைப்புக்குரியதாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய…

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்!

Posted by - January 31, 2017 0
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விமான சேவையில் தாமதம் – சில விமானங்கள் ரத்து !

Posted by - February 27, 2018 0
 ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் இன்றும் சில மணிநேர தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தேர்தல் பரப்புரைகள் புதன் நள்ளிரவுடன் முடிவு !

Posted by - February 5, 2018 0
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.