கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் பலி

7 0

அம்பலாந்தொட்ட – நோனாகம பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு இருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகி நோனாகம வாவியில் வீழ்ந்துள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட, நோனாகம பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் பேருந்து மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதோடு, ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அரசாங்கம் விளக்கம்

Posted by - September 18, 2018 0
இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

வேட்பாளர்கள் 23 பேர் கைது!

Posted by - January 20, 2018 0
உள்ளூராட்சித் தேர்தலில், தேர்தல் விதிகளை மீறிய மற்றும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் இதுவரை 23 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Posted by - December 15, 2018 0
ஹெரோயின் 30 கிராமுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் அங்குலன மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கிராமும் 740 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்…

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயம்!!!

Posted by - January 15, 2018 0
நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

அமைச்சர் விஜயதாசவுக்கு பதிலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Posted by - August 11, 2017 0
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளும் கட்சியின் உறுப்பினர்களே  கொண்டுவரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அமைச்சர்…

Leave a comment

Your email address will not be published.