ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்- மாகல்கந்தே சுதந்த தேரர்

335 0

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரர் சிறைச் சோறு சாப்பிட வேண்டிய ஒருவர் அல்லவெனவும், அவர் நாடு, இனம் , மதம் என்பவற்றை முன்னிருத்தி போராடும் ஒரு தேரர் ஆவார் எனவும் சுதந்த தேரர் சுட்டிக்காட்டினார்.

வாய்ப் பேச்சாக விடுக்கப்படும் இக்கோரிக்கை, அடுத்து வரும் நாட்களில் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் விடுக்கப்படும் எனவும் தேரர் கூறினார். ஜனாதிபதி இதற்கு நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார் என்பது மகாநாயக்கர்களின் எதிர்பார்ப்பு எனவும் சுதந்த தேரர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் ஒருவரைக் கொலை செய்ததன் மூலமோ, வேறு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதன் ஊடாகவோ சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் அல்ல. அவரினால், நீதிமன்றத்துக்கு எந்தவித அபகீர்த்தியும் ஏற்பட வில்லையென்பது தனது நம்பிக்கையாகும் எனவும் தேரர் தெரிவித்தார்.

நேற்று பொதுபல சேனாவினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment