கருணாநிதி நினைவிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி..!

14 0
 மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க கருணாநிதி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். பின்னர் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது, லட்சக்கணக்கான பொதுமக்களும் நேரில் அஞ்சலிசெலுத்தினர். இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் இன்று காலை மு.க. ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று மாலை கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு, கனிமொழி, ராஜாத்தியம்மாள், உதயநிதி, அருள்நிதி உட்பட குடும்பத்தினர் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பெய்த மழையை பொருட்படுத்தாமல், கொட்டும் மழையில் அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Post

தை அமாவாசை: ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர்

Posted by - January 27, 2017 0
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடி பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

சென்னை: வேலம்மாள் பள்ளி மாணவர்களின் நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகம்

Posted by - December 11, 2017 0
சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு நாடகம் அறங்கேற்றப்பட்டது.

தண்ணீர் தட்டுப்பாட்டால் அம்மா குடிநீர் அமோக விற்பனை

Posted by - June 17, 2017 0
தண்ணீர் தட்டுப்பாட்டால் ‘அம்மா குடிநீர்’ ஒரு லிட்டர் மினரல் வாட்டர் கேன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு பேருந்து நிலையங்களிலும், பஸ்களிலும் ரூ.10-க்கு ஒரு லிட்டர்…

திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Posted by - September 24, 2017 0
ஜெயலலிதாவின் மரணத்துக்குத் துணை போன திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

GSTஐ எதிர்க்க வேண்டியது ஏன்? – மதுரையில் கருத்தரங்கம்

Posted by - July 21, 2017 0
எளிய மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும், சிறு குறு தொழில்களை அழிக்கும், மாநில உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் GST வரி விதிப்பு குறித்தான விரிவாக விளக்கும் கருத்தரங்கத்தினை வருகிற…

Leave a comment

Your email address will not be published.