தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை!

12 0

தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

டெல்லியில் விவசாயிகள் 2 நாள் போராட்டம் : நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர்

Posted by - November 29, 2018 0
டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு ஆயுள்தண்டனை

Posted by - October 5, 2017 0
துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஷிப் தயிப் ஏர்டொகனை கடந்த வருடம் படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக அவர்களுக்கு…

இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவர் கைது

Posted by - August 27, 2017 0
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவரை கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – ஒருவர் சுட்டுக்கொலை

Posted by - August 12, 2016 0
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது காவல்துறையினரால், சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள கனேடிய சிறப்பு காவல்துறையினர், தனி ஒருவருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை…

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை

Posted by - October 23, 2016 0
அமெரிக்காவில் பெற்றமகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.