மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி – ஈராக் தேர்தல் ஆணையம்

7 0

ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணியை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.
இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து முறைகேடுகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் விசாரணை நடத்தி, 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் வாக்கு எண்ணிக்கையை செல்லாது என அறிவித்தது.
இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஈராக் அதிபர் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. விரைவில் சதார் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Post

நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு

Posted by - August 1, 2017 0
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகளை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு பதிவு…

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய ஜெர்மனி பெண்ணுக்கு ஈராக்கில் தூக்கு தண்டனை

Posted by - January 22, 2018 0
ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிய ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Posted by - October 25, 2016 0
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கடும் மழை – 56 பேர் பலி

Posted by - July 4, 2017 0
சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 56 பேர் பலியாகினர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 22 பேர்…

ஜோர்டானில் போலீசார் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலி

Posted by - August 12, 2018 0
ஜோர்டான் தலைநகர் அம்மானில் போலீசார் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Leave a comment

Your email address will not be published.