கிளிநொச்சி விபத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் பலி!

10 0

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று(6) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பருத்திதுறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய   தமது மகளை அழைத்துக் கொண்டு  யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்தது. இயக்கச்சிக்கும்- பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ் வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Post

கடும் ஆபத்து நிறைந்த நிலையில் தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் – நாள் 4

Posted by - March 4, 2018 0
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை லக்சம்புர்க் நாட்டுக்குள் வந்தடைந்து நகர முதல்வருக்கு மனு கையளித்ததுடன் தொடர்ந்து யேர்மனி எல்லையை…

சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே மாணவர்களின் மீதான படுகொலை சுட்டிக்காட்டுகின்றது .

Posted by - October 22, 2016 0
தமிழர் தாயகத்தில், யாழ் நகரில் நேற்றைய தினம் அதிகாலை 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும்…

இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

Posted by - December 15, 2018 0
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம்…

சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017

Posted by - July 23, 2017 0
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத…

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 08-04-2017 சனிக்கிழமை டென்காக் சூட்டமீர் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

Posted by - April 14, 2017 0
காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன. வணக்க நிகழ்வில் கிட்டண்ணா உள்ளிட்ட பத்து…

Leave a comment

Your email address will not be published.