பூரண அதிகாரத்துடனான விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும்-ஹக்கீம்

190 0

இன,மத, கலாசார ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் ஆராயும் முகமாக பூரண அதிகாரங்களுடன் கூடிய விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன,மத, கலாசார ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் ஆராயும் முகமாக பூரண அதிகாரங்களுடன் கூடிய விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும். இந்த நடைமுறை வெளிநாடுகளிலும் உள்ளன. ஆகவே நாமும் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். இதனூடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலகுவாக காண முடியும்.

அத்துடன் நிதி ஒதுக்கீடுகளுடன் கூடிய இனங்கள் தொடர்பான கொள்கையொன்றும் தயாரிக்க வேண்டும். இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே இந்த யோசனைகளை பாராளுமன்ற குழு தொடர்பான யோசனைகளில் உள்ளடக்க வேண்டும் என்றார்.

Leave a comment