விமானப்படை முன்னாள் விமானி துப்பாக்கியுடன் கைது

271 0

துப்பாக்கி ஒன்றுடன் டுபாய் நோக்கி பயணிக்க முற்பட்ட இலங்கை விமானப்படை முன்னாள் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரிய பகுதியில் வசிக்கும் குறித்த சந்தேகநபர், தற்பொழுது கென்யா நாட்டில் உள்நாட்டு விமான சேவையொன்றில் பணியாற்றிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment