வாத்துவ கடற்கரை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரவு நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டலில் வசதிகள் ஒழுங்காக இல்லாமையே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என நம்பப்படுகின்றது.

