புறக்கோட்டை கட்டடமொன்றில் தீ

300 0

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.

தீயினால் குறித்த கட்டடத்தின் முதலாம் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி, 13 தீயணைப்பு வீரர்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

Leave a comment