தெற்கில் இருந்து வட மாகாணத்திற்கு அதிகளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், தெற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இதற்கு பாரிய அளவில் கிடைப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாரியளவில் போதைப் பொருட்களை கைப்பற்றுவதாகவும், அவற்றை கடல் வழியாக கொண்டுவருவதன் பின்னணியில் தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
யுத்தம் முடந்த பின் வடக்கு மாகாணம் தெற்குடன் இணைந்ததையடுத்து இந்த போதைப் பொருள் பயன்பாடு வடக்கில் மிக வேகமாக பரவியதாகவும் அவர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.

