உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கதிர்காமம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமகாராம, அமரவெவ பிரதேசத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் மிருக வேட்டையில் ஈடுபடக் கூடியவர் என்று தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் திஸ்ஸமகாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

