சீகிரியாவில் கேபிள் கார் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை-விஜயதாஸ

209 0

சீகிரியாவுக்கு கேபிள் கார் திட்டம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மத்திய கலாச்சார நிதியம், சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சீகிரியாவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கேபிள் கார் அமைக்கும் திட்டத்தை இரகசியமான முறையில் முன்னெடுத்து வருவது சம்பந்தமாக  அறியக்கிடைத்துள்ளது.

சீகிரியா வேலைத்திட்ட அலுவலகம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயங்களில், சீன நிறுவனத்தின் பிரதிநிகளுடன் இணைந்து கேபிள் கார் அமைப்பதற்காக முக்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக பல விடயங்கள் அறியக் கிடைத்தன.

மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளரில் இருந்து கீழ் மட்ட அதிகாரிகள் வரையில் மிகவும் இரகசியமாக மூன்று நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறியக் கிடைத்துள்ளது.

எனினும் இந்த திட்டம் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தகவல் வௌியிடாமல் மறைக்கப்படுகிறது.

இதனையடுத்து இது தொடர்பான பல தகவல்கள் இரகசிய கெமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீன பிரஜைகளுடன் இணைந்து தொல்பொருள் சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவே தொல்பொருள் அதிகாரி ஒருவர்  ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினவிய போது ஒருபோதும் சீகிரியாவுக்கு கேபிள் கார் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று கூறினார்.

Leave a comment