சுயாதீனமாக தீர்மானங்கள் எடுக்க முடியாததால் பதவி விலகினேன்-பேராசிரியர் கொல்வின் குணரத்ன

283 0

இலங்கை வைத்திய சபையின் யாப்புக்கு அமைவாக சுயாதீனமாக தீர்மானங்கள் எடுக்க முடியாமை காரணமாக தான் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக அதன் முன்னாள் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன கூறினார்.

இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த விடயத்தை அவர் கூறினார்.

இலங்கை வைத்திய சபையின் யாப்பு காலத்துக்கேற்ற வகையில் மாற்றமடையாமை இந்த நிலை ஏற்படுவதற்கான முதன்மை காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நோயாளர் ஒருவருக்கு ஏற்படுகின்ற அநியாயத்தின் காரணமாக வைத்தியர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வைத்திய சபையால் விசாரிக்கப்படும் போது நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாத நிலை எழுந்துள்ளதாக பேராசிரியர் கொல்வின் குணரத்ன கூறினார்.

Leave a comment