கொள்கை வட்டி வீதங்களை அதே மட்டங்களில் பேண தீர்மானம்- இலங்கை மத்திய வங்கி

303 0

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இன்று (03 வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் உண்மைப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து படிப்படியான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment