பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று

281 0

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று ஆரம்பமாகின்றது. அந்தப் பாடசாலைகள் மீண்டும் மூன்றாவது தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதுடன், இதற்காக 03 இட்சத்து 55,326 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அந்தப் பரீட்சை நாடு பூராகவுமுள்ள 3050 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற உள்ளது.

Leave a comment