கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபாலபிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று பகல் 12.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், காயமடைந்த நபர் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவருடைய தந்தை என்று தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மோதரை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

