பரீட்சை மேலதிக கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீக்கம்

298 0

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு மேலதிகமாக கண்காணிப்பாளர்களாக  நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 356 பேரையும் நீக்கி விடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வித் துறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பரீட்சைகள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துடன் நேற்று இடம்பெற்றது. இதில் கல்வித் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டன

Leave a comment