கலப்பு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் – பெப்ரல் அமைப்பு

208 0

எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதானால், கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்ப்பாட்டு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதானால், கடந்த பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும்.

ஆனால் அந்த முறைப்படி தேர்தல் நடத்தப்படுவதை அரசியல் கட்சிகள் ஏற்றக்கொள்ளவதாக இல்லை. கலப்பு தேர்தல் முறைமையில் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாக கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள முறைப்பாடுகளை நிவர்த்திக்கக்கூடிய பரிந்துரைகள் மாகாண சபை தேர்தல் முறைமை மீளாய்வு செய்வதற்கான சிவில் சமூக குழுவின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே அவற்றைப் பின்பற்றி குறைப்பாடுகளை நீக்கி விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a comment