போதைப் பொருட்களை வைத்திருந்த 6 பேர் கைது

335 0

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போதைப் பொருட்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் ஹாவாஎலிய, அம்பகஸ்தோவ, கடுகஸ்தோட்ட, நுவரெலியா, பொரலந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஜூலை மாதம் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 19 பேர் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 4 சந்தேக நபர்களும், பெப்ரவரி மாதம் 3 சந்தேக நபர்களும், மார்ச் மாதம் 1 சந்தேக நபரும், ஜூன் மாதம் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment