தற்போதைய அரசாங்கம் திரிவுபடுத்தப்பட்ட அரசாங்கம்-கெஹலிய ரம்புக்வெல்ல

369 0

தற்போதைய பாராளுமன்றம் திரிவுபடுத்தப்பட்ட பாராளுமன்றம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

தற்போதைய பாராளுமன்றத்தின் திரிவுபடுத்தப்பட்ட நிலை நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

தற்போதைய அரசாங்கம் போன்று தேசிய வளங்களை அழித்த அரசாங்கம் ஒன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.

திரிவுபடுத்தப்பட்டுள்ள அரசியல் பின்னணியையும் திரிவுபடுத்தப்பட்டுள்ள நல்லாட்சியையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment