பல ஆண்டுகளாக கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமை புரிந்தவர்கள் சுமார் 125 பேர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலளாரின் உத்தியோகபூர்வ நிரந்தர நியமன கடிதத்துடன் சுமார் 10 ஊழியர்கள் கல்முனை மாநகர சபைக்கு கடமைகளை பெறுப்பேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல ஆண்டுகளாக தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்க கோரியும் கல்முனை மாநகர சபைக்கு முன்னாள் இவர்கள் போராட்டத்தை மேற்கொன்டனர்.
இதேவேளை தங்களுக்குரிய நிரந்த தீர்வு வரும் வரை தொடர்ந்தும் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் கல்முனை மாநகர சபை சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

