தாயும் குழந்தையும் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள். (காணொளி}

14 0

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், இன்று 43 ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, தாயும் குழந்தையும் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மனித புதைகுழி அகழ்வின் போது, சந்தோகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும், அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து,குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்னை அகற்றிய சந்தர்ப்பத்தில், அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தோகிக்கப்படுகின்ற வகையில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும், எந்த விதமான துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும், முழுமையான பரிசோனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்இ இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை, நீதிமன்றத்திற்கு முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும், நிபுணர்கள் குறிப்பிட்டார்.

தற்போது வரைஇ மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு..!!

Posted by - October 12, 2017 0
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே…

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்!

Posted by - April 10, 2017 0
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு!

Posted by - May 16, 2018 0
வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா வீரபுரத்தில் தமது காணிகள் பறிபோவதாக மக்கள் ஏக்கம்

Posted by - March 16, 2017 0
வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பிறேமதாச அரசினால் வழங்கப்பட்ட. 2 ஏக்கர் நிலத்தினையும் மைத்திரிபால அரசினால் அபகரிக்கத் திட்டமிடப்படுவதாக வீரபுரம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…

இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 34 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Posted by - May 17, 2017 0
 மன்னார் – உயிலங்குளம்   பகுதியில்   ஸ்ரீலங்கா இராணுவத்தினரால்   1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூரி   அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் படுகொலை…

Leave a comment

Your email address will not be published.