யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.(காணொளி}

12066 77

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட குழுவினர், தாக்குதல் நடத்திவிட்டு தெப்பிச் சென்றுள்ளனர்.

வண்ணார்பண்ணை கிழக்கு ஜே.100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில், இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல், கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியதுடன், அலுவலகத்திலிருந்த லப் டொப், கைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

Leave a comment