யாழ்ப்பாணம் கொக்குவிலில், வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், தாக்குதல் (காணொளி}

2 0

யாழ்ப்பாணம் கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீ வைத்ததுடன்இ வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளனர்.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் 1.00மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்களுடன் சென்ற 8 பேர் கொண்ட குழுவினர், பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீ வைத்துள்ளனர்.

அத்துடன்,வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்திற்குள் 8 பேர் கொண்ட ஒரே குழுவினர், கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்களில் இடம்பெற்று போதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

 

 

Related Post

இலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்

Posted by - July 29, 2018 0
இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.…

விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 6, 2018 0
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வேளையில் உடையார்கட்டு பகுதியில்…

இன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி!

Posted by - November 14, 2017 0
பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும்…

முல்லை கனிய மணல் அகழ்வு ஆராய குழு நியமனம்

Posted by - June 25, 2018 0
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந்த…

ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்

Posted by - August 1, 2016 0
பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5…

Leave a comment

Your email address will not be published.