இசை நிகழ்ச்சியின் இடைநடுவே கொலை சம்பவம்

276 0

கிரிபத்கொடை, டிங்கியாவத்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லைமீறிப் போனதால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment