அவசர விபத்து சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை- ராஜித சேனாரத்ன

198 0

வைத்தியசாலைகளில் அவசர விபத்துச் சேவைகளை விரிவுபடுத்தி நோயாளர்களுக்கு துரிதமான சுகாதார சேவையை வழங்குவதற்கு தற்போது ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இவற்றின் மூலம் விபத்திற்கு உள்ளாவோரைப் பாதுகாக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலைகளில் எந்தவித மருந்துத் தட்டுப்பாடும் இன்றி சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment