கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்களாகச் செயற்படும் சகல மத்திய நிலையங்களுக்கும் அண்மையில், அலைபேசிகளுக்கான சமிக்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட மத்திய நிலையங்களுக்கு அண்மையிலேயே, சமிக்ஞையில் தடையை ஏற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்தார்.
“தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் சமிக்ஞை படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியன்று ஆரம்பமாகும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

