உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

314 0

sampanthan-7201-720x480தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம். ஆத­ரவு கொடுக்­கவும் மாட்டோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களைச் சேர்ந்த நல்­லாட்­சிக்­கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் எதிர்க்
கட்சித் தலை­வரை அவரின் திரு­கோ­ண­மலை இல்­லத்தில் சந்­தித்து இன்­றைய அர­சி­யலும் பெண்
களின் பங்­க­ளிப்பும் என்ற கருப்­பொ­ருளில் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் மேற்­கொண்
ட­வாறு கூறினார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களைச் சேர்ந்த நல்­லாட்­சிக்­கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்­த­வர்­களும் அர­சியல் ஆர்­வ­ளர்­களும் கலந்­து­கொண்டு தமது பிர­தேச வாழ் பெண்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு சமூக, பொரு­ளா­தார, அர­சியல் பிரச்­சி­னைகள்
தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

சம்­பந்தன் கலந்­து­ரை­யா­டலின் போது மேலும் கூறி­ய­தா­வது,

தமிழ் மக்கள் இந்­நாட்டின் ஆட்­சிக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக தொடர்ந்தும் இருக்க வேண்­டு­மாயின் அவர்கள் எதிர்­பார்க்கும் முறை­யான அர­சியல் தீர்­வொன்றை இலங்கை அர­சாங்கம் முன்­வைக்க வேண்டும். அதையே தமிழ் மக்கள் அவ­லுடன் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். நாம் எதிர்
பார்க்கும் அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்­லை­யாயின் அர­சியல் அமைப்பு சட்­ட­வ­ரைபு முறையில் அர­சாங்கம் தவறு விடு­மாக இருந்தால் இதில் எமது எதிர்­பார்க்­கைகள் நிறை­வே­றாமல் இருக்­கு­மாக இருந்தால் நாம் மீண்டும் ஆயுதம் எடுக்க மாட்டோம். ஆனால் எம்மை ஆள­மு­டி­யாத நிலையை ஏற்­ப­டுத்­துவோம்.

நான் அண்­மையில் ஐ.நா செய­லாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்­தித்து உரை­யா­டிய போது
தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் புதிய அர­சியல் சாசனம் தொடர்பில் சில விட­யங்­களை எடுத்துக் கூறி­யி­ருந்தேன்.

புதிய அர­சியல் சாசன ஆக்­கத்தில் நாம் முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை செய்து வரு­கின்றோம்.
எங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு இம்­முறை உரு­வாக்­கப்­படும் அர­சியல் சாச­னத்தின் மூலம் தமிழ்
மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­ப­தாகும். இது­வரை இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட எந்­த­வொரு அர­சியல் சாச­னமும் தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வு­டனோ சம்­ம­தத்­து­டனோ கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை.

ஐக்­கிய நாடுகள் சபையின் சர்­வ­தேச மனித உரிமைப் பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டையில் ஒரு மக்கள் கூட்­டத்தின் சம்­ம­த­மில்­லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடி­யாது. ஆட்­சி­யென்­பதன் அத்­தி­வாரம் மக்­க­ளு­டைய சம்­ம­த­மாகும். மேற்­படி பிர­க­ட­னத்தில் இவ்­வி­டயம் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. மக்­களை ஆளும்­போது அவர்­களின் சம்­ம­தத்தைப் பெற்­றி­ருக்க வேண்டும்.

நாட்டில் நடாத்­தப்­ப­டு­கின்ற ஜன­நா­யக தேர்­தல்­களில் நியா­ய­மான வாக்­கெ­டுப்பின் மூல­மாக
மக்­களால் ஆணை தரு­கின்ற ஜன­நா­யக முடி­வு­களின் அடிப்­ப­டையில் தான் ஆட்சி அமைய வேண்டும். இதுதான் ஆட்­சி­யி­யலின் அத்­தி­வாரம்.

நடை­மு­றை­யி­லுள்ள அர­சியல் சாச­னத்தைப் பொறுத்­த­வரை தமிழ் மக்கள் தமது சம்­ம­தத்தை அந்த அர­சியல் சாச­னத்­துக்கு வழங்­க­வில்லை. எனவே எம்மை அச்­சா­ச­னத்தின் மூலம் ஆள­மு­டி­யாது. நாங்கள் எதிர்­பார்க்கும் விடயம் தற்­பொ­ழுது உரு­வாக்­கப்­படும் அர­சியல் சாச­னத்­துக்கு தமிழ்
மக்­க­ளு­டைய சம்­ம­தமும் பெறப்­ப­ட­வேண்டும். இதன் முழு­மை­யான அர்த்தம் என்­ன­வென்றால் வரை­யப்­படும் சாச­னத்தில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய அனைத்து உரி­மை­களும் வழங்­கப்­படும். வழங்­கப்­ப­டு­வ­த­னூ­டாக மேற்­படி அர­சியல் சாச­னத்­துக்கு நியா­ய­பூர்­வ­மான ஆத­ரவு கிடைக்­கு­மென எதிர்­பாக்­கலாம்.

ஐ.நா. சபையின் மனித மற்றும் சிவில் உரி­மை­களின் சட்­டங்­களின் அடிப்­ப­டை­யிலும் ஐ.நா.வின் சமூக பொரு­ளா­தார கலா­சார உரி­மை­களின் அடிப்­ப­டை­யிலும் மக்­க­ளுக்கு சுய நிர்­ண­ய­வு­ரிமை இருக்­கின்­றது. ஐ.நா. சபையின் சிவில் உரிமை சம்­பந்­த­மான விட­யங்­களை இலங்கை ஏற்றுக் கொண்­டுள்­ளது. இவை அனைத்தின் அடிப்­ப­டையில் ஒவ்­வொரு மக்கள் குழு­வுக்கும் சுய­நிர்­ணய உரிமை இருக்­கி­றது.

இதில் வெளி­யக சுய­நிர்­ணய உரி­மை­யென்றால் பூர­ண­மான சுதந்­தி­ர­மாகும். இதை நாம்
கோர­வி­ரல்லை. இதே­வேளை உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யென்றால் அதன் கருத்து உள்­ள­டக்கம் மக்­க­ளுக்­கான சுயாட்சி. தாம் வாழு­கின்ற பிர­தே­சங்­களில் பிராந்­தி­யங்­களில் ஏற்­ப­டுத்­தப்­படும் சுயாட்சி தான் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை. என­வேதான் உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு அர­சியல் தீர்வு வர­வேண்­டு­மென்று நாங்கள் கோரு­கின்றோம். அது­வந்தால் எமது சம்­ம­தத்தை அர­சியல் சாசனம் பெறும். அதற்கு ஆத­ர­வையும் வழங்­குவோம்.

உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் சுயாட்சி வழங்­கப்­ப­டு­மாயின் அந்த அர­சியல் சாச­னத்­துக்கு ஆத­ரவு வழங்­குவோம். இது வரா­விட்டால் தமிழ் மக்­களின் சம்­ம­த­மில்லாம் அவர்­களை நாம்
ஆள­மு­டி­யுமா? என்ற முடிவை ஆட்­சி­யா­ளர்கள் எடுக்க வேண்டி வரும். அதே­போன்று நாமும் பாரிய முடிவை எடுக்க வேண்டும். வரப்­போகும் அர­சியல் சாச­னத்­துக்கு தமிழ் மக்­க­ளு­டைய
ஆத­ரவு இல்­லாமல் இருக்­கு­மாக இருந்தால் அந்த முடிவை நாம் எவ்­வி­த­மாக எதிர்­நோக்கப் போகின்றோம் என்­பதும் முக்­கி­ய­மான முடி­வாக இருக்கும். தமிழ் மக்கள் ஆத­ரவு தர­மு­டி­யாத நிலை­யொன்று ஏற்­ப­டு­மாயின் தமிழ் மக்­களை ஆட்சி செய்­ய­மு­டி­யாத நிலை­யொன்றை
இந்­நாட்டில் நாங்கள் ஏற்­ப­டுத்­துவோம். இன்னும் தெளி­வாகக் கூறப் போனால் தமிழ் மக்­களை ஆட்சி செய்ய முடி­யாத கட்­டாய நிலை­மை­யொன்று ஏற்­படும். ஆனால் நிச்­ச­ய­மாக வன்­மு­றைக்கு நாங்கள் பலி­யா­க­மாட்டோம். எமது இளை­ஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்­து­வதை அனு­ம­திக்கப் போவ­தில்லை. அதே­வேளை ஆட்­சிக்கு அடிப்­ப­ணிந்து போகவும் மாட்டோம்.

எங்­களை ஆட்சி செய்ய முடி­யாத ஒரு நிலை­மையே ஏற்­படும் என நான் ஐ.நா. சபையின்
செய­லாளர் நாய­கத்­திடம் எடுத்துக் கூறி­ய­போது அவர் அமை­தி­யாக செவி­ம­டுத்தார்.

ஆட்சி செய்து கொண்­டி­ருக்கும் புதிய அர­சாங்க காலத்தில் ஏதா­வது நடக்­கு­மென்று நாம்
எதிர்­பார்க்­கின்றோம். அவ்­வாறு நடை­பெ­ற­வில்­லை­யாயின் நான் ஏலவே கூறி­யதே முடி­வாக இருக்கும்.

ஆனால் நாம் எமது இலக்கை அடைய வேண்­டு­மாயின் தமிழ் மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். நாங்­க­ளாக எதையும் குழப்­பக்­கூ­டாது. நிதா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும். மக்கள் மத்­தியில் பல்­வேறு அதி­ருப்­திகள் காணப்­ப­டு­கின்­றன என்­பதை நான் அறிவேன். வட­மா­கா
ணத்தில் முன்­னேற்­றங்கள் காணாது என்று கரு­து­பவர் கூட இருக்­கின்­றார்கள். இதையே சர்­வ­தேச சமூ­கமும் கூறு­கின்­றது. ஆனால் அர­சாங்­கத்­துக்கு சில­வற்றை நிறை­வேற்­று­வதில் ஒரு சில
பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக தெரி­கி­றது. நாங்கள் எல்­லா­வற்­றையும் நிதா­ன­மாக முன்­னெ­டுக்க வேண்டும்.

இன்­றைய அர­சியல் போக்கில் நல்­ல­தொரு சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ளது. இரு பெரும் கட்­சி­களும் இணைந்து புதி­ய­தொரு அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இது நல்­ல­தொரு சகுனம். அவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும். தமிழ்
மக்­க­ளுக்கு நல்­ல­தொரு அர­சியல் தீர்வை வழங்க வேண்­டு­மென ஜனா­தி­பதி பிர­தமர் ஆகியோர் விரும்­பு­கின்­றார்கள். அது அவர்­க­ளுக்கு அவ­சி­ய­மா­னது. ஏனெனில் நாடு தாங்க முடி­யாத கடன் சுமையில் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற வேண்­டு­மென்­பது அவர்­களின் இன்­றைய தேவை­யாக இருக்­கி­றது.

வெளி­நா­டு­களின் முத­லீட்டுப் பாய்ச்சல் கணி­ச­மான அள­வுக்கு தேவைப்­ப­டு­கி­றது. நாட்­டினை
அபி­வி­ருத்தி செய்ய, பொரு­ளா­தா­ரத்தை வளர்த்­தெ­டுக்க, அந்­நிய முத­லீ­டு­களைக் கொண்­டு­வர வேண்­டு­மாயின் பாரிய முத­லீ­டுகள் தேவை­யா­க­வுள்­ளது. இவற்றைக் கொண்­டு­வ­ர­வேண்­டு
மாயின் நியா­ய­மான அர­சியல் தீர்வை வழங்க வேண்­டி­யது அவர்­க­ளுக்கு அவ­சி­ய­மா­ன­தா­க
வுள்­ளது. தீர்வைக் கொண்­டு­வ­ரா­விட்டால் சர்­வ­தேச நாடு­களோ அர­சாங்­கங்­களோ இந்த நாட்டில் முத­லீடு செய்ய வர­மாட்­டார்கள் என்ற உண்மை அவர்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும்.

என­வேதான் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்­டு­மென்­பதில் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள்.
மீண்­டு­மொரு யுத்­தத்தை அவர்கள் விரும்­ப­வில்லை. சாத்­வீகப் போராட்­டத்தைக் கூட
விரும்­பா­ம­லி­ருக்­கலாம். இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் சர்­வ­தேச சமூ­கத்­தி­னு­டைய
பங்­க­ளிப்பும் ஊக்­கமும் உயர்ந்­த­ளவில் காணப்­ப­டு­கி­றது. தற்­போது உள்ள சூழ்­நிலை இதற்கு முன்பு இருக்­க­வில்லை. கணி­ச­மான மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. சர்­வ­தேச சமூகம் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில் ஆக்­க­பூர்­வ­மான அக்­கறை காட்டி வரு­கி­றது. இதை நாம் பாது­காக்க வேண்டும். இதை கட்டியெழுப்புவது இலகுவான விடயமாக இருக்கவில்லை. அறிவுபூர்வமாக நாம் நடந்து கொண்ட காரணத்தினால் தான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம் அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் கூடிய விரைவில் நடைபெறுமென்பதை நாம் எதிர்பார்க்கலாம். நாங்கள் ஒற்றுமையாகவும் ஒருமித்தும் நிற்போமாக இருந்தால் எங்கள் எதிர்பார்ப்பை அடைய முடியும்.

முறையான அரசியல் தீர்வொன்றை நாம் அடைவோமாக இருந்தால் வட கிழக்கின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் எமது புலம்பெயர்ச் சமூகம் பாரிய பங்களிப்பை செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. தாம் வழங்கும் நிதியோ உதவியோ தாம் விரும்பிய வண்ணம் எதிர்பார்க்கும் முறையில் செலவு செய்ய சுதந்திரம் இருக்குமா? என்ற சந்தேகங்கள் அவர்கள் மத்தியில் காணப்படலாம். ஆனால் முறையான அரசியல் தீர்வொன்று கொண்டுவரப்படுமாயின் நிலைமைகள் மாற வாய்ப்புண்டு என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.