ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை- சரத்

328 0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குமார் சங்கக்கார விளையாட்டு வீரராக நல்ல மனிதர் எனவும் இருப்பினும் அவருக்கு அரசியல் ரீதியாக எந்த அனுபவமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒருவருக்கு அரசியலில் ஈடுபடுவது சிரமம் எனவும் தனக்கு அரசியலை கற்றுக்கொள்ள நீண்டகாலம் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என்ற வகையில் கட்சியின் தலைமைத்துவ வெற்றி பெறச்செய்ய முன்னிற்பதாகவும் அவ்வாறு இவ்வாவிடின் அரசியலில் ஆர்வமுள்ள ஒருவரை கட்சியில் தலைமைத்துவத்தில் முன்னிருத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருப்பது ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் எனவும் தன்னுடைய கொள்கையின் அடிப்படையில் எந்தவொரு பொது வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment